நாடாளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

நாடாளாவிய ரீதியில் எதிர்வரும் 2 நாட்களுக்கு  டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்  இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில்   குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் அனைத்து அமைச்சுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, கடந்த வருடம் மாத்திரம் நாட்டில் 25 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
புதியது பழையவை