மட்டக்களப்பில்-பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதி

மட்டக்களப்பு மகாஜனா கல்லாரி மாணவர்கள் 14 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65 ஆக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பணிப்பாளர் வைத்தியர் இ. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நேற்று 19 ம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் வங்கி ஊழியர்கள், மாணவர்கள் 65 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் நேரடி தொடர்புபட்ட 94 பேர வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 7 நாட்களின் பின்னர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை