எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று காலை நயினாதீவுக்கு விஜயம் செய்தார்.
நயினாதீவுக்கு சென்ற அவர், நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு விகாராதிபதியிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.