கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

புத்தாண்டு தினமான நேற்றிரவு கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை