மாத்தறை, தெனியா பல்லேகம சன்மால நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக நேற்று (01)சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி மரணமடைந்தனர் என்று தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹப்புகல, கிங்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த 48 வயது நபரும் அவரது 16 வயது மகனுமே நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.
சிறுவன் நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்து செல்பி எடுக்க முற்பட்டபோது, நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார் என்றும் அவரை காப்பாற்றுவதற்காக அவரது தந்தையும் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ள நிலையில் இருவரும் நீரில் மூழ்கி மரணமடைந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்களை மீட்கும் பணியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.