போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கைது

பாணந்துறை அலுபோமுல்ல பகுதியில் இன்று 7 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 70 மில்லியனுக்கும் அதிக பெறுமதிவுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை