கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும், பொது சுகாதார அதிகாரிகள் ஆறு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் , இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் முகக்கவசங்களை அணியாமல் அல்லது சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் கடைப்பிடிக்கப்படாமை காரணமாக பொது சுகாதார அதிகாரிகள் ஆபத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விமான நிலைத்தில் பணியாற்றும் தமது சங்கத்தின் உதவிப்பணிப்பாளருக்கு, ஓய்வறைகள் கூட இல்லை.
எனவே இந்த வசதியற்ற நிலை தொடருமாக இருந்தால், தமது அதிகாரிகள், விமான நிலையத்தில் தொடர்ந்தும் பணியாற்றுவதா?இல்லையா? என்பதை தீர்மானிக்கவேண்டியேற்படும் என்றும் உப்புல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.