வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியால் உதவிகள் வழங்கிவைப்பு!
ஜீவஜோதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாகரைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களான கட்டுமுறிவு, ஆண்டான்குளம் பகுதியில் வாழும் தேவைப்பாடு உடைய குடும்பங்களுக்கு இலகைத் தமிழரசு கட்சியி மட்டக்களப்பு மாவட்ட வாலிபமுன்னணி தலைவர் லோ.திபாகரன் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க ஜீ.எழில்வண்ணண்
யுகா கலைக்கழகம் (தலைவர்) அவர்களினால் ஒருங்கிணைப்பில் உலர் உணவு பொதிகள் கனடா மகேன் அனிதா தம்பதியினரின் புதல்வன் மகேன் அபிராம் அவர்கள் 6வது பிறந்தநாளை (01.02.2022) முன்னிட்டு ம வழங்கிவைக்கப்பட்டது
கட்டுமுறிவு, ஆண்டான்குளம் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மத்தியகிழக்கு நாட்டில் தொழில் புரியும் தமிழ்த்தேசிய பற்றாளர்களால் கற்றல் உபகரணங்களும் வாலிபமுன்னணி ஊடாக கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணி தலைவர் லோ.திவாகரன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.ஶ்ரீநேசன், வாலிபர் அணி செயலாளர் சஷீந்திரன், வாகரை பிரதேச முன்னாள் தவிசாளர் கோணலிவ்கம்,