வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இடியுடன்கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து கா ணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறை முதல் மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,   காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  
புதியது பழையவை