நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரும் கலாநிதியுமான சந்திம ஜீவந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தமக்கு வழங்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 208 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதற்கமைய நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 283 ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.