மட்டக்களப்பு- கல்லடி, நொச்சிமுனை பிரதான வீதியில் இன்று மாலை (22)இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.
நொச்சிமுனை விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையம் முன்பாக ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் மோதியே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது மட்டக்களப்பினை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.