உழவர் பெருமக்கள் தமது கடின உழைப்புக்கு பயன்நல்கிய இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த தைத்திருநாள் அமைத்திருப்பதாகவும், உலகத் தமிழர்களின் சிறப்பு நாளாக இந்த நாள் பார்க்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
தைத்திருநாள் வாழ்த்து செய்தியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோரத்தில், அனைவரினதும் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக அமைவதே நாட்டின் சுபீட்சத்திற்கு அத்திவாரமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன, மத, பேதமின்றி அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகையாக தைத்திருநாள் மாறியிருப்பது, தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறைந்த சௌபாக்கியத்துடன், அமைதியும், சமாதானமும் நின்று நிலைத்து அனைவரும் மகிழ்வேடு வாழவேண்டுமென தாம் வாழ்த்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.