ஹட்டனில் இடம்பெற்ற பாரிய விபத்து

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதில் பயணம் செய்த 09 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடாபில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நேற்று மாலை 6.45 மணியளவில் வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற கிரிகட் சுற்றுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி செல்லும் போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும், இதன் போது 16 பேர் வரை பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான் அதிக வேகத்தில் சென்றமையால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமையினாலேயே தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சல்லடை கம்பி பாதுகாப்பு வேலியினை உடைத்துக்கொண்டு சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வரை வீதி போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. குறித்த தனியார் வான் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை