வவுணதீவு பொலிஸ் பிரிவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியைப் பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை கஞ்சா செடியுடன் கைது செய்ததுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பண்ணையை பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிராம் கஞ்சா செடியுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
புதியது பழையவை