மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குளாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சென்று பார்வையிட்டிருந்தார்.
அதேவேளை, குறித்த பகுதிக்கு அருகில் இருக்கும் பனை-தென்னை மரங்களில் ‘இது இராணுவத்தின் சொத்து- அனுமதியின்றி நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு அவர்களைக் குடியேற்றும் நடவடிக்கை ரீ.எம்.வி.பி. தலைமையில் அண்மையில் நடைபெற்றிருந்தது.