நுவரெலியா, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா ஒட்டரி தோட்டத்தில், குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் 6 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் மரமொன்றில் கூடுக்கட்டியிருந்த குளவிக்கூட்டை கழுகு தாக்கியதில் குளவிக் கலைந்து வந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளது.
குளவிக் கொட்டுக்குள்ளான பெண்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.