20 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ் விபத்து

நுவரெலியா, சலன்கந்த – ஹட்டன் பிரதான வீதியில், இன்று (8) காலை, பஸ்ஸொன்று சுமார் 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சலன்கந்தையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை