அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
08 அதிபர்கள் சங்கங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள திருத்தச் சுற்றறிக்கை காரணமாக அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினமும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.