அபாய வலயமாக மாறி வரும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,300 பேருக்கு ஒமைக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதென சந்தேகிக்கப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார்.

40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன், இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
புதியது பழையவை