யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில்-மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் எழுச்சியோடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை