காரும் பாரவூர்தியும் மோதி விபத்து

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பாரவூர்த்தியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பைக்கோ வாகனத்தை ஏற்றிச் சென்ற பார ஊர்தியை முந்திச் செல்வதற்கு கார் முற்பட்டபோதே விபத்து நிகழ்ந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரில் ஒருவர் மட்டுமே பயணித்தாகவும் வாகனங்கள் இரண்டும் யாழ்ப்பாணம் நோக்கிய திசையில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை