புத்தளம் மாதம்பே - தினிப்பிட்டிய குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்திலுள்ள குளமொன்றில் இன்று காலை பூ பறிக்கச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புவக்குளத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாதம்பே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.