மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் சில மணி நேரம் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் பதற்ற நிலை நிலவியுள்ளது.
வீதி போக்குவரத்து அதிகார சபையின் அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்து உரிமையாளர்கள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கும் சில பேருந்துகளை வழிமறித்ததன் காரணமாக பதற்ற நிலை காணப்பட்டுள்ளது.
இதன்போது பதற்ற நிலையைத் தடுப்பதற்கு வந்த பொலிஸார் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் 3 பேருந்துகளுக்கு வழக்குத் தாக்கல் செய்து மீண்டும் பேருந்தை காத்தான்குடிக்கு திருப்பி அனுப்பி இருந்த நிலையில்,பேருந்துகள் மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்றுள்ளது.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பேருந்து முரண்பாடு காரணமாகப் பிரயாணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.