மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் பூர்வாங்க ஆட்சேபனை நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரால் தொடரப்பட்ட வழக்கு, பெப்ரவரி மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் ஆணையாளருடைய பூர்வாங்க ஆட்சேபனை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு, மீளப் பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடுசெய்வதை தடுக்கக் கோரி, மாநகர மேயரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் நேற்று(25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்கில் ஆயராகியிருந்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
சென்ற தவணையில் விசாரணைக்காக இந்த வழக்கை எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஆணையாளர் சார்பிலே ஒரு பூர்வாங்க ஆட்சியர் படையொன்று எழுப்பப்பட்டு இருந்தது.

அதாவது முதல்வர் தாக்கல் செய்த எதிர் சத்திய கூற்று அதனுடைய பிரதி எனக்கு கொடுக்கப்படவில்லை ஆதலால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றொரு ஆட்சேபனை எழுப்பப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நீதிபதி இன்றைய அதற்கான கட்டளையை ஆற்றியுள்ளார். அந்த ஆணையாளர் சார்பாக எடுக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை நீதிமன்றத்திலே நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
அதை நிராகரித்து வழக்கு விசாரணைக்காக எழுத்துமூலம் சமர்ப்பிப்பதற்காக பெப்ரவரி 21ஆம் திகதிக்கு தவனையிடப்பட்டிருக்கிறது.
புதியது பழையவை