யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து


யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பம் அருகிலிருந்த மின்மாற்றியுடன் மோதி கம்பிகள் அறுந்ததனால் தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்றது. விபத்தில் வாகனம் சேதமடைந்தபோதும் அதில் பயணித்தவா்கள் ஆபத்தின்றி தப்பித்துள்ளனா்.

மேலும் விபத்து சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

புதியது பழையவை