இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அரசாங்கத்தின் மரியாதையையும் வெகுமதியையும் பெற்றவர் தென்னிலங்கையை சேர்ந்த யுவதி யொஹானி டி சில்வா ஆவார்.
அதேசமயம் மற்ற தமிழ் யுவதி கணேஸ் இந்துகாதேவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆனால் அவருக்கு எவ்வித தடல்புடல் வரவேற்போ அல்லது வெகுமதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை . குறித்த யுவதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிறந்தவராக உள்ளார்.
இந்நிலையில் ஒருவருக்கு பாடல் பாடியதற்காக பரிசும் வீடும் வழங்கி கௌரவித்த இந்த அரசாங்கம் , நாட்டை கௌரவப்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றவருக்கு ஏன் எவ்வித மரியாதையையும் பரிசுகளையும் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இருவருமே ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற நிலையில் ஒருவரை பாராட்டி கௌரவப்படுத்திய அரசாங்கம் , மற்றவரை கௌரவப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.






