யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (14)மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.