பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, பெப்ரவரி 22ஆம் திகதி அமர்வின் போது, உற்பத்தி தரகர்களுக்கு உரிமம் வழங்கும் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறை மற்றும் இறப்பர் மீள் நடவு மானியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
