கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 22 இடங்களை அகழ்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் காணப்படும்  தொல்பொருள் இடங்களை ஆய்வு செய்வதற்கு  484 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவற்றுள்  64  இடங்களில் நில அளவைப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன்  மேலும்  22 இடங்களுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்  நில அளவையாளர் ஆரியரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  இடம்பெற்ற பௌத்த ஆலோசனை சபையின் 13வது கூட்டத்தில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்தல், பராமரித்தல், ஞாயிறு அறநெறி பாடசாலைகளை பராமரித்தல், வடக்கு, கிழக்கு தொல்பொருள் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்தல், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்  மேற்கொள்ளுதல் என்பன தொடர்பில் இதன்போது  கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பௌத்த ஆலோசனை சபை உறுப்பினர்கள், மகா சங்கத்தினர், ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை