இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,692 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 621,985 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும்11,538 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.
