37,500 மெ.தொன் டீசலுக்கு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் உள்ள 37,500 மெட்ரிக் தொன் டீசலுக்கு நேற்று (22) இரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக  எரிசக்தி அமைச் அறிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த டீசலை விடுவிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி (டொலர்) பிரச்சினை காரணமாக, எரிபொருளை கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்போது 37,500 மெட்ரிக் தொன் டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை