ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு இன்று(28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
குறித்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பனத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
