தடுப்பூசி பெற்றவர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களை அடையாளங்காண்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய தடுப்பூசிகளின்  மூன்று அளவுகளையும் பெற்றுக் கொண்டவர்களை அடையாளங்காண்பதற்கு புதிய செயலி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு முழுமையாக தடுப்பூசி பெற்றமைக்கான சான்றிதழ் அட்டை அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள செயலியில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவுசெய்வதன் ஊடாக  முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
புதியது பழையவை