திருகோணமலையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை-வெள்ளத்தில் தாழ் நிலப் பகுதிகள் மூழ்கியுள்ளது

திருகோணமலையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் மழைக் காரணமாக திருகோணமலை , கிண்ணியா, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளுக்குள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


புதியது பழையவை