நாட்டில் இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தென் மாகாணம் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)அனுமதி வழங்கியுள்ளது.
தென் மாகாணத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணிக்கு கிடைப்பட்ட காலத்தில் மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் PUCSL தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் மேற்படி தீர்மானமானது எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை தென் மாகாணத்தில் இன்று 3 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முதலில் அறிவித்தது.
மவுஸ்ஸாக்கலே மற்றும் சமனவெவ மற்றும் காஸ்டல்ரி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக PUCSL இன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
