இன்று முதல் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் நிபுணர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காதார தொழிற்சங்கங்களின் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் இன்று காலை 7 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

அத்துடன், குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு சிறு தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கங்களின் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
புதியது பழையவை