மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் "உயிர்காக்க பயில்வோம்" நீச்சல் பயிற்சி நிகழ்வு

நீரில் மூழ்குவோர்களை காப்பாற்றுவது தொடர்பான நீச்சல் பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.

கல்குடா ஏ.வி. டைவர்ஸ் மற்றும் கல்குடா அனர்த்த சேவைப் பிரிவு ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

சுமார் மூன்று நாட்களாக இடம்பெற்ற இப் பயிற்சி முகாமில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றனர்.

இவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் அப்துல் மஜீத் ஹலீம், முஹம்மது கபீர் இப்றாஹீம் ஆகியோர் 200 மீற்றர் தூரத்தை 10 நிமிடத்தில் நீந்திக்கடந்து பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

அனுபவம் வாய்ந்த Life Saving அணியின் வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்பட்ட இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை