விஷேட பண்டங்கள் மற்றும் சேவை வரி சட்டமூலத்தை வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று காலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
இந்தச் சட்டமூலத்திலுள்ள சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார்.
