நாட்டை உயர்த்தும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை -எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டை ஆள்வதற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய போதிலும், நாட்டை உயர்த்தும் திறன் தற்போதைய நிர்வாகத்திற்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

காலியில் உள்ள ஆமைகள் பாதுகாப்பு மையத்திற்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்குள்ளான MV X-Press Pearl கப்பலின் விளைவாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களை அரசாங்கம் சரியாக மதிப்பிடுவதற்கும் இதுவரை இழப்பீடுகளை மதிப்பிடுவதற்கும் தவறிவிட்டது.

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் அனர்த்தத்தின் விளைவாக ஏற்பட்ட சுற்றாடல் அழிவுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசாங்கம் பலவீனமாக இருப்பதாகவும், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கும் அரசாங்கம் பலவீனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்தினால் தீர்வுகளை வழங்க முடியாது.

MV X-Press பேர்ல் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு அரசாங்கத்தால் முடியவில்லை எனவும், நாட்டுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடும் முறை குறித்து அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை