ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு இன்று ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளது.
இந்தநிலையில், மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை எதிர்வரும் 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், அதற்கான பதிலை அன்றைய தினமே முன்வைக்கத் தீர்மானித்துள்ளதாக வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் வரைபும் அரசுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புக்கூறல் மீதான அரசின் பாராமுகம் மற்றும் அண்மைய மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களும் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
