“வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வேலைகள் செயற்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 336 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியவகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 336 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 14ஆயிரத்து 21 கிராம சேவையாளர் பிரிவுகளில் இன்று காலை 08. 52 அளவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய , ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஐந்து அல்லது ஆறு திட்டங்களைத் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
