மஸ்கெலியாவில் மதில் இடிந்து வீழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியா ஓல்டன் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றின் பாதுகாப்பு மதில் இடிந்து வீழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று மாலை இவ்வாறு பாதுகாப்பு மதில் இடிந்து விழுந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் குறித்த குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், காயமடைந்த மூரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்காக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குடியிருப்பை அண்மித்துள்ள ஏனைய குடியிருப்புகளும் பாதிப்படைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


புதியது பழையவை