பயங்கரவாதத்தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக தடைச் செய்ய கோரி  பிரேரணை முன்வைக்கவுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதேவேளை, பயங்கரவாதத்தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி இன்றைய  தினம் அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்துபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. 

இதன்படி, கடந்தவாரம் முழுவதும் வட மாகாணத்த்தை உள்ளடக்கியதாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  
இந்நிலையில், இன்று (20)காலை 9 மணியளவில் காரைதீவு பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
 
புதியது பழையவை