மட்டக்களப்பு-பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

(இ.சுதாகரன் )
அரசாங்கத்தினால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு இலட்சம் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சி.சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் எஸ்.கணேசலிங்கம் மற்றும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலை வரும் பாராளுமன்றை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதி எ.சசிதரன் உட்பட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலையில் மலசல கூட புனரமைப்பு மற்றும் சேதமடைந்த பாடசாலைக்கூரை புனரமைப்பு வேலைகளுக்கான வேலைத்திட்டங்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை