பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டு உபகரணங்கள வழங்கி வைப்பு

இ.சுதாகரன்-

மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு றொற்ரிக் கழகத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டனர்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு றொற்றிக் கழகத்தினால் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கும் வழங்கும் நிகழ்வு வித்தியாலய முதல்வர் சி.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையில் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளமை தொடர்பாக றொற்றிக்கழக திருகோணமலை கிளைக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தியமைக்கு அமைவாக. குறித்த விளையாட்டு உபகரணங்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன.

விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் றொற்றிக் கழகத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவர் J.ரொஷான் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை பாடசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை