வேக கட்டுப்பாட்டை இழந்த கென்டர் வாகனம் விபத்து

வவுனியா பம்பைமடுப்பகுதியில் இன்று (07)பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்புக் கேடர்களை ஏற்றிவந்த கென்டர் வாகனம் பம்பைமடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

இந்நிலையில் விபத்தின்போது வாகனத்தில் பலர் பயணித்திருந்த நிலையில் இருவர் படுகாயமைடந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் சிறுகாயங்களுடன் தப்பினார்கள்.
இந்த விபத்து தொடர்பாக பூவசரங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை