மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

