உற்பத்திக்கு பயன்படுத்தப்படாத நிலங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

தனியார் நிறுவனங்களிடம் காணப்படும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படாத நிலங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அமைச்சர் எஸ் எம் சந்திரசேன இதனை தெரிவித்துள்ளார்.

உற்பத்திக்கு பயன்படுத்தாத நிலங்களை அரசாங்கம் மீளப்பெற்று உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார்.
புதியது பழையவை