நாட்டில் நாளைய தினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்தடையினை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, A, B, C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
