க.பொ.த (சா/த) பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி நாளை

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை யுடன் (17) முடிவடையவுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி விண்ணப்பம் ஊடாகவும், அரசாங்கப் பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தியும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருட பரீட்சைக்கு கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை